சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*தேன்
வாங்குவதற்கு முன்பு அதன் தரம் அறிந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. சர்க்கரை
நோயாளிகள் இனிப்பு வகைகளைத் தவிர்த்து கைப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவுடன் சேர்த்து
உண்பது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க மூலிகைகள் பெரிதும் உதவிகரமாக
இருக்கின்றன. அத்தி, அல்லி, ஆலமரம், ஆவாரை, இஞ்சி, கடுக்காய், கருங்காலி, கல்யாண
முருங்கை,கேழ்வரகு, சரக்கொன்றை, கோவை, சீந்தில், தண்ணீர்விட்டான், தொட்டாற்சிணுங்கி,
நன்னாரி, நாவல், பீர்க்கு, மருது, மூங்கில், வாதுமை உள்ளிட்ட பல மூலிகைகளை பல்வேறு
வடிவங்களில் உட்கொள்ளலாம்.
சூரியநமஸ்காரம், பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், கோமுகாசனம், சலபாசனம், நவாசனம்,
மயூராசனம், தனுராசனம், ஹாலாசனம், சர்வங்காசனம் போன்ற யோகாசனங்களைச் செய்வதும் நல்ல
பலன் தரும்.
மேலும்.. |