சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*பாரம்பர்ய நெல் வகைகளை உட்கொள்வதில் மிகப்பெரிய
அறிவியல் காரணங்கள் உள்ளன. மேற்சொன்ன பாரம்பர்ய அரிசி வகைகள் குறைந்த கிளைசெமிக்
(Low glycemic) வகையைச் சேர்ந்தது என்பதால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவை மெள்ள
மெள்ள சேர்க்கின்றது. இதனை `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் ' (Complex carbohydrate)
என நவீன மருத்துவம் ஒப்புக்கொண்டுள்ளது. அது நாம் உட்கொள்ளும் அளவைப் பொறுத்தது.
பெரும்பாலும் நாம் உண்ணும் அரிசிகள் தீட்டப்படாதவையாக (unpolished rice) ஆக இருப்பது
உடலுக்கு நன்மை தரும். பாரம்பர்ய நெல் வகைகள் மட்டுமன்றி நம் தமிழர் மரபில்
பல்வேறுவகையான சிறுதானிய உணவுகள் இருக்கின்றன. அவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்
வாழ்வியலோடு மீண்டும் கலந்துவருகிறது..
மேலும்..