சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*நம்
மரபில் ஒரு லட்சத்து 65ஆயிரம் நெல் வகைகள் இருந்தாக வரலாறு கூறுகிறது. அரிசி நம்
உடலுக்கு நம்மையும் அறியாமல் பல்வேறுவகையான நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. அரிசி நம்
உடலைக் கெடுக்கவில்லை; அரிசியையும் மண்ணையும் வளர்ச்சி என்ற பெயரில் நாம்தான்
பாழாக்கிவிட்டோம். பாரம்பர்ய நெல் வகைளைத் தேடிச்சென்று, புசித்து அவற்றின் பயனை
அடைய முயலவேண்டும். நம் உடலுக்குத் தேவையான விஷயங்களைத் தேடிச்சென்றால் மட்டுமே
அவற்றை அடைய முடியும். தமிழர் வாழ்வியலுடன் கலந்திருந்த நம் நெல் வகைகளை
மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நம் மரபு சார்ந்த அனைத்து விஷயங்களையும்
நாம் தேடத்தேட அவை மறுஉருவம் பெற்று, நம் அடுத்தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்துப்
பட்டயமாக மாறியிருக்கும்..
மேலும்..
|