மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
** கீரை, காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்ள
வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். விரைவில்
தூங்கி அதிகாலை எழ வேண்டும்.
* கணினி, சமையல் வேலை போன்ற உஷ்ணத்தைப் பெருக்கக்கூடிய பணிகளை போதுமான இடைவெளி
விட்டு செய்ய வேண்டும்.
* காட்டுக்கருணை, காராக்கருணை, புளியம்பிரண்டை, நாப்பிரண்டை, மருள்கிழங்கு, கற்றாழை
வேர், சமையல் கருணை, மாம்பருப்பு, தோல் நீக்கிய சுக்கு, கடுக்காய்த்தோல், கொடிவேலி
வேர்ப்பட்டை, கோரைக்கிழங்கு, சரக்கொன்றை புளி ஆகியவற்றை சம அளவு எடுத்து, தோல்
நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் போட்டு உலர்த்தி இடித்து, சலித்து,
லேசாக நெய்யில் பிசறி, இளவறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
.
மேலும்.. |