மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
** வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கைப்பிடி அளவு
எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன
வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.
* நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து
தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,
வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன்
அளவு எடுத்து பசு வெண்ணெய் ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என
40 நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் . இந்த மருந்துகளைச்
சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது.
மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது..
மேலும்.. |