மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
** பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை
அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகரித்து மலத்தை
வெளியில் போகாதபடி அடக்கி மலவாயில் அதிக வெப்பம் உண்டாகும். இதனாலும் நோய் உண்டாகும்.
* நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்ட நாள் வயிற்றுப்போக்கு,
ஆசன வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் போன்றவற்றாலும் மூல நோய் உண்டாகும்.
எளிய சிகிச்சைகள்
* பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு
சேர்த்து துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
* துத்தி இலையை இரண்டு கை அளவு நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய
வெங்காயம் நறுக்கி போட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது
சேர்த்து 10 நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்..
மேலும்.. |