சர்க்கரை நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!.
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
*சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க ஏராளமான
சித்த மருந்துகள் உள்ளன. இந்நிலையில், சர்க்கரை நோயாளிகளுக்கு எழக்கூடிய சில
சந்தேகங்கள், கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியது அவசியமாகிறது.
அசைவ உணவுகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இறைச்சி வகைகளைத்
தவிர்த்து மீன் உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய்யில் பொரித்த மீன்களைத் தவிர்ப்பது
நல்லது. மீன் மற்றும் இறைச்சிகளை உண்ணும்போது அரிசியுடன் சேர்த்து உண்பதைத்
தவிர்ப்பது நல்லது. ஒருவேளை இறைச்சி சாப்பிட நேர்ந்தால் நன்றாக வேகவைத்துச்
சாப்பிடுவது நல்லது. இதை வாரம் ஒருமுறை உண்பது நல்லது. பால் மற்றும் பால் பொருள்களை
உண்ணலாமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை..
மேலும்.. |