மூல நோய் தீர எளிய
வழிமுறைகள்!
தொடர்கிறது..
(முதல்
பக்கம்)
**மேலும் ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தனம்
கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம்
கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம்
வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை
வேண்டுமானாலும் செய்யலாம்.
* பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள்,
தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக
நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து
நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். மேலும் தானியங்களில் உள்ள
நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், கடுமையான வலியில் இருந்து
தப்பிக்கலாம். எனவே ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது
உணவில் சேர்த்து வாருங்கள்..
மேலும்.. |