|
சீத்தாப்பழத்தின் பயன்கள்..(முதல்
பக்கம்)
** சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீத்தாப்பழத்தை விதைகளை
நீக்கி அதில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பிரச்சினை தீர்ந்து
சிறுநீர் தாராளமாக பிரியும், நீர்க்கடுப்பு தீரும்.
** இஞ்சி சாறு, கருப்பட்டியுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து சாப்பிட
பித்தம் விலகும்.
** இரவு இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு சீத்தாப்பழம் சேர்த்து
சாப்பிட நன்கு தூக்கம் வரும். தூக்கத்திற்கு சீத்தாப்பழம் சிறந்ததாகும்.
** சீத்தாப்பழத்தின் சதை பகுதியை எடுத்து சிறிது உப்பு சேர்த்து
முகப்பருவின் மேல் தடவி வர முகப்பரு மறையும்.
** இதன் விதைகளை நன்றாக காயவைத்து அரைத்து பொடியாக்கி சம அளவு
பாசிப்பயறு மாவு சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி நல்ல
மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். மேலும் பேன்கள் அழிந்துவிடும்...
மேலும் குறிப்புகள்
|