கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து
இயல்பாகவே தாகம் எடுத்துத் தண்ணீர் குடிப்போம். அப்படிக் குடிக்கும் தண்ணீர்
அளவுக்கு அதிகமாகப் போகக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலின்
தேவைக்கு மேல் தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு (சோடியம்)
நீர்த்துப்போகும். அதனால் மூளையில் வீக்கம் ஏற்படும் - அதுவும் முதியவர்களுக்கு.
அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் ஒருவித போதையை ஏற்படுத்தும். உடலில் உள்ள சோடியமும்
இதர உப்புக்களும் நீர்த்துவிடும். சரியான அளவில் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீர்
வைக்கோல் நிறத்தில் (லேசான மஞ்சள்) இருக்கும். அது ஆரோக்கியத்தின் அடையாளம்.
மேலும்
அறிய
Click Here