ஆப்பிரிக்கா கண்டம்
பற்றிய அரிய தகவல்களை அறியுங்கள்!
ஆப்பிரிக்காவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பு 30,293,000 சதுர கிலோ
மீட்டர்கள் ஆகும். சூடான் நாடு ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய நிலப்பரப்பைக்
கொண்ட நாடாகும். இந்த நாடு 2,504,530 சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
ஆபிரிக்கக் கண்டத்திலேயே மிகச்சிறிய நாடு சீசெல்சு என்ற தீவு நாடாகும். இந்நாட்டின்
நிலப்பரப்பு 453 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமேயாகும்.
உலக மக்கள் தொகையில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 16% மக்கள் தொகை ஆப்பிரிக்காவில் தான்
உள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, எகிப்து,காங்கோ ஜனநாயக குடியரசு, தென்னாப்பிரிக்கா
ஆகிய நாடுகள்தான் ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதன்மையான 5 நாடுகள்
ஆகும். மேலும்
அறிய .Click Here
மனிதனின் கண்களின் அளவு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. ஆனால் மனிதனின்
மூக்கு மற்றும் காதுகளின் வளர்ச்சிக்கு ஒரு போதும் வாழ்நாளில் முடிவே கிடையாது.
ஒரு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75
தடவைகள் துடிக்கும். 70 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ்ந்தால் அவனது இதயம் 2.5 பில்லியன்
தடவைகள் மொத்தமாக வாழ்நாள் முழுக்க துடிக்கும்.
காதின் மத்திய பகுதியில் உள்ள Stapes என்ற எலும்பு தான் மனித உடலின் மிகவும் சிறிய
எலும்பாகும். இந்த எலும்பின் நீளம் 2.8 மில்லிமீட்டர்கள் மட்டுமேயாகும். மேலும்
அறிய .Click Here