ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய
அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால்
கல்லீரலுக்கு மருந்து என்று பொருள் ஆகும்.
ஆவாரையை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற வேறு பெயர்களிலும்
அழைக்கலாம். இதன் தாவரவியல் பெயர் காஸியா அரிகுலடா ஆகும். இதை ஆங்கிலத்தில் தி
டினர்ஸ் காஸியா என்றும், தெலுங்கில் தாங்கெடு என்றும், மலையாளத்தில் ஆவரா என்றும்,
கன்னடத்தில் தாங்கடி - கைடா என்றும், ஆவரா - கைடா என்றும், சமஸ்கிருதத்தில்
டெலபொட்டகம் என்றும், இந்தி மற்றும் துலுக்கில் தர்வார் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும்
அறிய .Click Here
விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம்,
சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை
அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை
காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு
அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில்
தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா
பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்..
மேலும்
அறிய .Click Here
பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர்
கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக
விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா
எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்
குணங்கள் வளமையாக உள்ளது.
பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி
பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது
தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக்
கட்டுப்படுத்த இது உதவிடும்.
மேலும்
அறிய .Click Here